வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவிலில் முடிகாணிக்கை இலவசம் என அறிவிப்பு பலகை
ADDED :1521 days ago
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில், ஓலப்பாளையம் அருகே கண்ணபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களிலும் தமிழக அரசு அறிவித்த படி முடிகாணிக்கை இலவசமாக செலுத்தலாம் என அலுவலகம் மற்றும் முடி எடுக்கும் இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் வைக்கப்பட்ட இந்த அறிவிப்பு பலகையினால் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த வேண்டியதில்லை என்பதை தெரிந்து கொண்டு கிராமப்புறங்களில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமிக்கு முடியை காணிகாகையாக செலுத்திவிட்டு தரிசனம் செய்து சந்தோசமாக சென்றனர். இதுவரை முடி காணிக்கை சீட்டு வாங்கி முடி எடுப்பவர்களுக்கு பணம் கொடுத்து முடிகாணிக்கை செலுத்தி வந்தனர்.