உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் வட்டாரத்தில், 50 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு தயார்

சூலூர் வட்டாரத்தில், 50 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு தயார்

சூலூர்:  சூலூர் மற்றும் கருமத்தம்பட்டியில், 50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஹிந்து முன்னணியினர் தயாராகி உள்ளனர். வைரஸ் தொற்று பரவலால், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட, அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி சிலைகள் வைத்து வழிபட ஹிந்து முன்னணியினர் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சூலூர் வட்டாரத்தில், ஒரு சில இடங்களை தவிர்த்து, 50 இடங்களில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஹிந்து முன்னணியினர் முடிவு செய்துள்ளனர்.  இதற்காக, நேற்று முன்தினம் முதல் சிலைகளை எடுத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூலூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் திட்டமிட்டபடி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முன் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கிடையில், போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !