உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி விநாயகர் சிலைகளுக்கு தமிழக பகுதியில் தடை

புதுச்சேரி விநாயகர் சிலைகளுக்கு தமிழக பகுதியில் தடை

 மரக்காணம் : புதுச்சேரியில் இருந்து எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகளை, தமிழக பகுதி கடலில் கரைக்க போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் 3ம் நாளான நேற்று, புதுச்சேரி விநாயகர் சிலைகளை, விழுப்புரம் மாவட்ட கடலில் விஜர்சனம் செய்வதற்கு விழுப்புரம் மாவட்ட போலீசார் தடை விதித்திருந்தனர்.கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அருண் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தமிழக எல்லையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட மெகா சைஸ் விநாயகர் சிலைகளை தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், தந்திராயன்குப்பம், நடுக்குப்பம் கடலில் கரைக்க வாகனங்களில் நேற்று ஊர்வலமாக எடுத்து வந்தனர். அவர்களை, கோட்டக்குப்பம் எல்லையிலேயே தமிழக போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !