37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை மேலூர் வந்தடைந்தது
ADDED :1514 days ago
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம், மேலூர் கொள்ளிடக் கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இன்று காலை மேலூர் வந்தடைந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.