‘லே’ விநாயகர்
ADDED :1589 days ago
இமயமலைத் தொடரில் லடாக் பகுதியின் தலைநகரம் ‘லே’. இங்கிருந்த ஒரு குடும்பத்தினருக்கு யானை துரத்துவது போல அடிக்கடி கனவு வந்தது. பரிகாரமாக இங்குள்ள ‘ஸபித்துக் காளிமாதா’ கோயிலில் வழிபட்ட போது. விநாயகர் கோயில் கட்ட அம்மன் உத்தரவு கொடுத்தாள். காஞ்சி மஹாபெரியவரின் ஆசி பெற்று கோயில் திருப்பணியைத் தொடங்கிய பின் யானை துரத்தும் கனவு இல்லாமல் போனது. சென்னையில் இருந்து கோயிலுக்குரிய கட்டுமானப்பொருட்கள், விநாயகர் சிலை அனுப்பப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி உயரத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது. உலகத்தின் உயர்ந்த இடத்தில் இருக்கும் விநாயகர் கோயில் இதுவே. ஜுன் முதல் செப்டம்பர் வரை இக்கோயிலை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் பனி சூழ்ந்திருக்கும்.