அதிகம் சாப்பிடாதீர்கள்
ADDED :1509 days ago
நமக்கு பிடித்த உணவுகள் கண் முன் இருந்தால் வயிறு முட்ட சாப்பிட்டு விடுவோம். இதற்கு பிறகுதான் தெரிய வரும் நாம் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்பது. சரி இப்படி சாப்பிட்ட பிறகு நிம்மதியாக இருக்க முடியுமா என்றால் கிடையாது. வயிறு கணத்து நிற்பது போன்ற ஒரு உணர்வு, நெஞ்செரிச்சல், எதுக்களித்தல் போன்ற பிரச்னைகளை சந்திப்போம். இது தவறான விஷயமாகும். இப்படி தொடர்ந்து செய்தால் உடல்நலம் பாதிக்கும். எனவே வயிறு முட்ட சாப்பிடாதீர்கள்.