பெரியக்காண்டியம்மன் கோவிலில் மக்கள் நலம் வேண்டி யாகம்
ADDED :1498 days ago
குளித்தலை: சின்னரெட்டியபட்டி பெரியக்காண்டியம்மன் கோவிலில் உலக மக்கள் நலம் வேண்டி லலிதாம்பிகை யாகம் நடந்தது. குளித்தலை அடுத்த, பொருந்தலூர் பஞ்., சின்னரெட்டியப்பட்டியில் விநாயகர், பெரியக்காண்டியம்மன், சப்தகன்னிமார் அம்மன், முருகன், முனியப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனிதனியே கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் பொதுமக்கள் சார்பில் உலக மக்கள் நலம் வேண்டுதல், 11ம் ஆண்டு அபிஷேகம் மற்றும் லலிதாம்பிகை மஹா யாகம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.