கல்லூரணி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1540 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி பலகுடி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட, அம்மாச்சி அம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை மற்றும் கஜ பூஜை, புண்யாகவாசனம்,வேத பாராயணம், ரத்தின பிரதிஷ்டை,யாத்ரா தானம், கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை பத்ரகாளியம்மன் வள்ளி தேவசேனா சமேத முருகன் சுவாமி | சால கோபுரம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை பலகுடி உறவின்முறை நிர்வாகிகள் செய்தனர். அன்னதானம் நடந்தது.