தாகூர் நகரில் கோவில் கும்பாபிஷேகம்!
புதுச்சேரி: தாகூர் நகரில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, மூர்த்தி ஹோமம் நேற்று நடந்தன. இன்று (27ம் தேதி) காலை 9 மணிக்கு ரக்ஷா பந்தனம், மாலையில் யாக சாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை நடக்கிறது.நாளை (28ம் தேதி) காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, இரவு 8 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 29ம் தேதி காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, 8.30 மணிக்கு உள்புறப்பாடு, 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமான கும்பாபிஷேகம் நடக்கிறது.மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, அசோக் ஆனந்த் எம். எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் தலைவர் தண்டபாணி, செயலர் முத்துக்கிருஷ்ணன், பொருளாளர் சம்பந்தம், துணை செயலர் ராஜசேகர், துணைத் தலைவர் மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் பழனி ஆகியோர் செய்து வருகின்றனர்.