உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரும்பத்து வைகுண்ட சுவாமி கோயில் திருவிழா

பெரும்பத்து வைகுண்ட சுவாமி கோயில் திருவிழா

நான்குநேரி: பெரும்பத்து வைகுண்டசுவாமி கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி நிகழ்ச்சி நடந்தது.  நான்குநேரி அருகேயுள்ள பெரும்பத்திலுள்ள வைகுண்டசுவாமி கோயிலில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. இதில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூபாளஏடு வாசிப்பு, உச்சிப்படிப்பு, யுகப்படிப்பு, அன்னதானம் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை வைகுண்டசுவாமி சப்பரத்தில் எழுந்தருளினார். பஜனை மற்றும் மேளதாளங்களுடன் முக்கிய வீதிகளில் சப்பரம்வீதி உலா வந்தது . இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அய்யாவைகுண்டரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !