கிரகதோஷம் போக்கும் விரதம்
ADDED :1487 days ago
ஒருமுறை நாரதர் சத்திய லோகத்தில் தங்கியிருந்தார். அங்கு பிரம்மாவிடம், “சுவாமி! கலியுகத்தில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய சிறந்த விரதம் எது?’’ என்று கேட்டார்.
“புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையானுக்கு இருக்கும் விரதமே சிறந்தது” என்றார். இதன் பின்னர் பூலோகத்தில் மக்கள் விரதத்தை பின்பற்றத் தொடங்கினர். இதற்கு சனிக்கிழமை காலையில் நீராடி துளசி நீரை பருகி விரதமிருக்கத் தொடங்குவர். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என கலவை சாதங்களை நைவேத்யமாகப் படைத்து வழிபடுவர். சிலர் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் மேற்கொள்வதும் உண்டு. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஏழுமலையானுக்குரிய இந்த விரதம் இருப்பவர்கள் கிரகதோஷத்தில் இருந்து விடுபடுவர். ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்வர். செல்வ வளம் பெருகும்.