அதிகாலை நவநீத ஆரத்தி
ADDED :1520 days ago
வெங்கடேசப் பெருமாள் மீது தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடக்கும். இந்த சேவையில் வேங்கடேச சுப்ரபாதம், ஸ்தோத்திரம், பிரபத்தி, மங்களாசாசனம் ஆகியவற்றை தாளபாக்கம் அன்னமாச்சார்யா வம்சத்தினர் பாடுவர். அதன் பின்னர் கீர்த்தனைகள் பாடுவர். பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்பவரால் பாடப்பட்ட சுப்ரபாதம் கேட்டே ஏழுமலையான் தினமும் கண் விழிக்கிறார். அப்போது பசும்பால், வெண்ணெய், சர்க்கரை கலந்த நைவேத்யம் படைத்து தீபாராதனை நடக்கும். இதற்கு நவநீத ஆரத்தி என்று பெயர்.