பாலாஜி இருக்க பயமேன்
ADDED :1581 days ago
திருப்பதி வெங்கடேசப்பெருமாளின் வலதுகை அவரது திருவடியை காட்டியபடி கீழ்நோக்கி இருக்கும். ‘பாலாஜி இருக்க பயமேன்’ என்பதை இதன் மூலம் அவர் நமக்கு உணர்த்துகிறார். பெருமாளின் திருவடியைச் சரணடைந்தால் மட்டுமே பிறவி என்னும் கடலை நம்மால் எளிதாக கடக்க முடியும். நவக்கிரகங்கள் ஒன்பதும் அவரது திருவடியில் காத்து கிடப்பதாக வெங்கடேச சுப்ரபாதம் தெரிவிக்கிறது. அவரது உத்தரவுப்படியே கிரகங்கள் செயல்பட்டு நன்மை, தீமையை உண்டாக்குகின்றன. கிரக தோஷத்தில் இருந்து தப்பிக்க எண்ணினாலும், அதற்கும் ஏழுமலையானின் திருவடியைச் சரணடைவது ஒன்றே வழி.