உடல்நலம் பெற...
ADDED :1737 days ago
முன்னோருக்கு நாம் கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை சேர்ப்பவர் சூரிய பகவான். அதனால் அவருக்கு ‘பிதுர் காரகர்’ என்று பெயர். அமாவாசையன்று தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர் காரகரான சூரியனுக்கு இரு கைகளைச் சேர்த்து தண்ணீர் விடுவது நன்மை தரும். இதை ‘அர்க்கியம் விடுதல்’ என்பர். புனித தீர்த்தங்களில் நீராடும் போது முழங்கால் அளவு தண்ணீரில் நின்றபடி சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்தால் நீண்ட ஆயுள், உடல்நலம், ஆத்மபலம் ஏற்படும். தந்தை, மகன் உறவு பலம் பெறும்.