வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1847 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் மூலவரும் உற்சவர் விநாயகர் ஊஞ்சல் உற்சவத்திலும் அருள்பாலித்தனர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்றிரவு 7:00 மணிக்கு விநாயகர் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.