கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா
மதுராந்தகம்: மதுராந்தகம், கோதண்டராமர் கோவில் பிரம்மோற்ச விழா, நேற்று துவங்கியது.மதுராந்தகத்தில் ஏரிகாத்த ராமர் கோவில் என அழைக்கப்படும் கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவம், நேற்று துவங்கியது. காலை 4.30 மணிக்கு, கொடியேற்றப்பட்டது. இரவு 7.30 மணிக்கு சிம்மவான உற்சவம் நடந்தது.இன்று காலை 7 மணிக்கு ஹம்சவாகனம், இரவு 7.30 மணிக்கு சூரிய பிரபை, 29ம் தேதி காலை 5 மணிக்கு கருடசேவை, இரவு 7.30 மணிக்கு அனுமந்த வாகனம், 30ம் தேதி காலை 7 மணிக்கு சேஷ வாகனம், இரவு 7.30 மணிக்கு சந்திர பிரபை, அடுத்த மாதம் 1ம் தேதி காலை 8 மணிக்கு நாச்சியார் திருக்கோலம், இரவு 7.30 மணிக்கு யாளிவாகனம், 2ம் தேதி காலை 6 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலம், இரவு 7.30 மணிக்கு யானை வாகனம், 3ம் தேதி காலை 11 மணிக்கு, பெரிய பெருமாள் திருமஞ்சனம், இரவு 10 மணிக்கு பெரிய பெருமாள் உற்சவம், புஷ்பக விமானம் புறப்பாடு நடைபெறும்.நான்காம் தேதி காலை, பிரபல உற்சவமான தேரோட்டம் நடைபெறும். அன்று காலை 5.15 மணியிலிருந்து 6 மணிக்குள், சுவாமி தேரில் எழுந்தருள்வார். காலை 8.30 மணிக்கு, தேரோட்டம் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு திருமஞ்சனம், 5ம் தேதி மாலை 3 மணிக்கு திருபாஞ்சாடி திருமஞ்சம், இரவு 7.30 மணிக்கு குதிரை வாகனம், 6ம் தேதி காலை 7 மணிக்கு ஆள்மேல் பல்லக்கு, இரவு ஸப்தாபரனம், 7ம் தேதி காலை 9 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும். மறுநாள் மாலை விடயாற்றி உற்சவம் நடைபெறும்.விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் மாதவன், செயல் அலுவலர் வடிவேல்துரை மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.