உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைசூரு தசரா விழா துவக்கம்: மின் விளக்கில் ஜொலித்த அரண்மனை

மைசூரு தசரா விழா துவக்கம்: மின் விளக்கில் ஜொலித்த அரண்மனை

மைசூரு : உலக பிரசித்தி பெற்ற 412வது மைசூரு தசரா விழாவை சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி, கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா துவக்கி வைத்தார்.

கர்நாடகாவில் மன்னர் ஆட்சி காலத்திலிருந்து மைசூரில் வெகு விமரிசையாக தசரா விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் விழா இன்று (அக்.07) கோலாகலமாக துவங்கியது. கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெள்ளி பல்லக்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி தசரா விழாவை துவக்கி வைத்தார். கிருஷ்ணாவுக்கு, சந்தனத்தால் செதுக்கப்பட்ட யானை பரிசாக வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு இரவில் மின் விளக்கில் மைசூரு அரண்மனை தங்கம் போன்று ஜொலித்தது. மேலும் நகரின் பல பகுதிகளில் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !