உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தசரா விழாவிற்காக நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தசரா விழாவிற்காக நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கடலாடி : கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்று வட்டாரகிராமங்களில் தசரா விழாவிற்காக பல்வேறு வேட மணிந்து நேர்த்திக்கடன் செய்து பக்தர்கள் பூஜையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் துாத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலுக்கு செல்வதற்காக, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பக்தர்கள் நவராத்திரி ஆரம்பம் முதல் நிறைவு வரை காலை முதல் இரவு வரை பத்திரகாளியம்மன், குறவன் குறத்தி, போலீஸ்காரர், அரசர், கிளி, பிள்ளையார், குடுகுடுப்பைக்காரன், பிச்சைக்காரன், நர்ஸ், அனுமன், இளம்பெண் உள்ளிட்ட 30 க்கும் அதிகமான வேடமிட்டு மக்களிடம் காணிக்கை பெற்று நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றுகின்றனர். இந்தாண்டு கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, துாத்துக்குடி செல்லாமல், கடலாடியிலேயே அதற்குஉரிய பூஜைகளை செய்கின்றனர். மேளதாளம் முழங்க 50க்கும் அதிகமான வேடமிட்ட பக்தர்கள் குழுவாக இயங்கி, ஆடிப்பாடி தெருக்கள், நகர் வீதிகளில் வலம் வருகின்றனர். இரவில் கடலாடி பத்திர காளியம்மன் கோயில் அருகே உள்ள ஞான முத்தீஸ்வரர் சமேத முத்தாலம்மன் கோயிலில் தசரா விழாவை கொண்டாடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !