உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருங்கப்பாக்கத்தில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை

முருங்கப்பாக்கத்தில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை

புதுச்சேரி : முருங்கப்பாக்கம் ராமானுஜ பஜனை மடத்தில், 16 அடி உயர ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது

புதுச்சேரி அடுத்த முருங்கப்பாக்கத்தில், ராமானுஜ பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு, 16 அடி உயர ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு மேல் பஞ்சகவ்ய பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி, யந்திர ஸ்தாபனம் நடந்தது.10.௦௦ மணி முதல் 11:00 மணிக்குள், 16 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !