வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்
ADDED :1539 days ago
உடன்குடி: உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவையொட்டி 208 பால்குட ஊர்வலம் நடந்தது. கொடை விழா 24ம் தேதி வருஷாபிஷேகத்துடன் துவங்கியது. விழா நாட்களில் புஷாபஞ்சலி,108 திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, உஜ்ஜயினி காளி அம்மன் சப்பர பவனி, கும்பம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, பக்தி இன்னிசை, சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று மணிக்கு 208 பால்குட ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.