செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1538 days ago
வடமதுரை: அய்யலூரில் கடைவீதி ரயில்வே கேட் அருகில் இருந்த செல்வ விநாயகர் கோயில் இரட்டை ரயில் பாதை பணியில் அகற்றப்பட்டது. நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த விநாயகருக்காக 100 மீட்டர் அருகிலே முத்துநாயக்கன்பட்டியில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், பழனிச்சாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜமோகன், தி.மு.க., நகர செயலாளர் கருப்பன் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை களர்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, காமராஜ் நகர், சந்தைப்பேட்டை, நாகப்பபிள்ளைகளம், அண்ணாநகர், குறிஞ்சி நகர் பகுதி மக்கள் செய்திருந்தனர்.