முத்துநாயகி அம்மன் கோயிலில் புரட்டாசி திருவிழா
ADDED :1772 days ago
வாடிப்பட்டி: மதுரை பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா அக்.,26 கொடியேற்றத்துடன் துவங்கியது. மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடக்கிறது.பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். நவ.,3 பால் குடம், நவ.,6 அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். ஏற்பாடுகளை பரவை கிராமமக்கள் செய்து வருகின்றனர்.