சோலைமலை முருகன் கந்தசஷ்டி விழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை
ADDED :1470 days ago
அழகர்கோவில் : அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவில் நவ., 9 மாலை சூரசம்ஹாரம் உற்ஸவம் பக்தர்களின்றி நடக்கிறது.
கோயில் செயல் அலுவலர் அனிதா கூறியதாவது: இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ., 4 துவங்கி 10 வரை நடக்கிறது. சுவாமி புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் பக்தர்களின்றி நடத்தப்படும். நவ., 9 மாலை சூரசம்ஹாரம், மறுநாள் நவ., 10 திருக்கல்யாணம் உற்ஸவங்கள் பக்தர்களின்றி நடத்தப்படும். உற்ஸவம் முடிந்ததும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கோயில் வளாகத்திற்குள் தங்கி விரதம் இருத்தல், அன்னதானம் செய்தல், தொன்னை பிரசாதம் வழங்க விழா நாட்களில் அனுமதியில்லை. பக்தர்கள் வீடுகளில் காப்பு கட்டி சஷ்டி விரதம் கடைபிடிக்கலாம். சூரசம்ஹாரம் நிகழ்வு யூடியூப்பில் காணலாம் என்றார்.