உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களின்றி வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களின்றி வழிபாடு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாட்டில் அனுமதி மறுப்பால் பக்தர்கள் இன்றி நடந்தது. சதுரகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் ஓடைகளில் நீர்வரத்து உள்ளது. இதனால் ஐப்பசி பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் , வனத்துறை அனுமதி மறுத்தது.டூவீலர்களில் வந்த பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி வணங்கி சென்றனர். பக்தர்கள் இன்றி கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. சுந்தர மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல்அலுவலர் விசுவநாதன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !