இஸ்கான் கோயிலில் கோவர்த்தன பூஜை
ADDED :1457 days ago
திருநெல்வேலி: வண்ணார்பேட்டை, இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கோவர்த்தன பூஜை விழா நடந்தது. சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பு பகவான் கிருஷ்ணர், கோவர்த்தன மலையை குடையாக பிடித்து தனது பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை நினைவில் கொள்ளும் வகையில் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கோவர்த்தன பூஜை விழா நேற்று நடந்தது. அன்னத்தால் கோவர்த்தன மலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், கோவர்த்தன கிரி அன்னகக்கூடவிழா நடந்தது. பக்தர்கள் அன்னக்கூட கோவர்த்தன கிரிவலம் செய்து வழிபட்டனர். ‘கிருஷ்ணர் கோவர்த்தன மலையாக அருள்பாலிக்கிறார், மக்களின் தீய எண்ணங்கள் மறைந்து நற்சிந்தனைகள் மலர இந்தவிழா உதவிகரமாக அமையும்’ என
கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 19ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு தாமோதர தீபத்திருவிழா நடக்கிறது.