உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சஷ்டி நாயகனை சரணடைவோம்

சஷ்டி நாயகனை சரணடைவோம்


ஓம் அரனார் பாலகனே போற்றி

ஓம் அக்னியில் உதித்தவனே போற்றி

ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

ஓம் அழகு மன்னவனே போற்றி

ஓம் அல்லல் தீர்ப்பவனே போற்றி

ஓம் ஆனைமுகன் தம்பியே போற்றி

ஓம் ஆறுமுக சுவாமியே போற்றி

ஓம் ஆண்டியாய் நின்றவனே போற்றி

ஓம் ஆதிக்கும் ஆதியே போற்றி

ஓம் ஆவினன் குடியானே போற்றி

ஓம் இன்முகத்தவனே போற்றி

ஓம் இந்திரன் மருகனே போற்றி

ஓம் இளையவனே போற்றி

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடரைக் களைவோனே போற்றி

ஓம் ஈசனின் மைந்தனே போற்றி

ஓம் ஈராறு கண்ணனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

ஓம் ஒப்பிலாதவனே போற்றி

ஓம் ஓங்கார ரூபனே போற்றி

ஓம் கருணா மூர்த்தியே போற்றி

ஓம் கதிர்வேலவனே போற்றி

ஓம் கந்தப்பெருமானே போற்றி

ஓம் கடம்பனே போற்றி

ஓம் கவசப் பிரியனே போற்றி

ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

ஓம் கிரிராஜனே போற்றி

ஓம் கிருபாநிதியே போற்றி

ஓம் குகப்பெருமானே போற்றி

ஓம் குமர பெருமானேபோற்றி

ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி

ஓம் குறத்தி மணாளனே போற்றி

ஓம் குருவாய் வருபவனே போற்றி

ஓம் குருபரனே போற்றி

ஓம் குறிஞ்சி தெய்வமே போற்றி

ஓம் கூடல் குமரனே போற்றி

ஓம் சங்கரன் மகனே போற்றி

ஓம் சஷ்டி நாயகனே போற்றி

ஓம் சரவணபவனே போற்றி

ஓம் சண்முக நாதனே போற்றி

ஓம் சண்முக கனியே போற்றி

ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

ஓம் சத்ரு சங்காரனே போற்றி

ஓம் சர்வேஸ்வரனே போற்றி

ஓம் சிக்கல் பதியே போற்றி

ஓம் சிங்கார வேலனே போற்றி

ஓம் சுப்பிரமணியனே போற்றி

ஓம் சுரர் பூபதியே போற்றி

ஓம் சுந்தர மூர்த்தியே போற்றி

ஓம் சுகுமாரனே போற்றி

ஓம் சுவாமி நாதனே போற்றி

ஓம் சூரசம்ஹாரனே போற்றி

ஓம் செல்வ நாயகனே போற்றி

ஓம் செந்துார் காவலனே போற்றி

ஓம் செங்கல்வராயனே போற்றி

ஓம் சேனாதிபதியே போற்றி

ஓம் சேவற்கொடியோனே போற்றி

ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி

ஓம் சோலைமலையானே போற்றி

ஓம் ஞான பண்டிதனே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

ஓம் ஞான உபதேசிகனே போற்றி

ஓம் தணிகை நாயகனே போற்றி

ஓம் தயாபர மூர்த்தியே போற்றி

ஓம் தண்டமிழ் நாதனே போற்றி

ஓம் தண்டாயுத பாணியே போற்றி

ஓம் தகப்பன் சுவாமியே போற்றி

ஓம் தமிழ்த்தெய்வமே போற்றி

ஓம் தவப்புதல்வனே போற்றி

ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி

ஓம் துணைவனே போற்றி

ஓம் தென்பரங்குன்றனே போற்றி

ஓம் தெவிட்டா இன்பமே போற்றி

ஓம் தெய்வானை நாதனே போற்றி

ஓம் தெய்வசிகாமணியே போற்றி

ஓம் தேவாதிதேவனே போற்றி

ஓம் நிர்மலனே போற்றி

ஓம் நீறணிந்தவனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பரப்பிரம்மமே போற்றி

ஓம் பழனியாண்டவனே போற்றி

ஓம் பாலகுமாரனே போற்றி

ஓம் பன்னிரு கையனே போற்றி

ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி

ஓம் போகர் நாயகனே போற்றி

ஓம் மறைநாயகனே போற்றி

ஓம் மயில் வாகனனே போற்றி

ஓம் மகா சேனனே போற்றி

ஓம் மந்திர மூர்த்தியே போற்றி

ஓம் மருத மலையானே போற்றி

ஓம் மால் மருகனே போற்றி

ஓம் மாமரம் பிளந்தாய் போற்றி

ஓம் முருகப்பெருமானே போற்றி

ஓம் முத்தமிழ் வித்தகா போற்றி

ஓம் மூவாத மூர்த்தியேபோற்றி

ஓம் யோக நாயகனே போற்றி

ஓம் வயலுார் நாதனே போற்றி

ஓம் வள்ளி நாயகனே போற்றி

ஓம் விறலி மலையானே போற்றி

ஓம் விநாயகர் சோதரனே போற்றி

ஓம் வெற்றி வேலனே போற்றி

ஓம் வேலாயுத மூர்த்தியே போற்றி

ஓம் வேத முதல்வனே போற்றி

ஓம் வையம் காப்பவனே போற்றி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !