உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டையில் சஷ்டி சூரசம்ஹாரம்

தேவகோட்டையில் சஷ்டி சூரசம்ஹாரம்

தேவகோட்டை: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாவதண்டாயுதபாணிக்கும் , கைலாசநாதர் கோயிலில் சுப்பிரிமணியருக்கும், மலைக்கோயிலில் தண்டாயுதபாணிக்கும் , பாலமுருகன் கோயிலில் முருகனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் , சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோயில்களில் தங்கி கந்த சஷ்டி கவசம் படித்தும் உபவாசம் இருந்தும் மாலையில் விரதத்தினை நிறைவு செய்து கந்தனை வழிபட்டு வீடுகளுக்கு சென்றனர். நகர சிவன் கோயிலில் முருகப்பெருமான் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்தார். அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சி யில் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று தெய்வானை கல்யாணமும் நாளை வள்ளி கல்யாணமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !