திருக்கணித பஞ்சாகங்கப்படி குரு பெயர்ச்சி விழா
ADDED :1450 days ago
ஈரோடு: திருக்கணித பஞ்சாகங்கப்படி, நேற்று முன்தினம் இரவு, 11:35 மணிக்கு குரு பகவான் மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி ஈரோடு டி.வி.எஸ்., வீதி மகிமாலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, சிறப்பு யாகம் நடந்தது. தட்சிணாமூர்த்தி சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள், நவகிரங்களுக்கு, 16 வகை அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்ட்டது. தொடர்ந்து, 12 ராசிக்கும் சிறப்பு அர்ச்சனை செய்து, மஹா தீபாராதனை காட்டினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.