உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேரில் சுவாமி வீதியுலா

மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேரில் சுவாமி வீதியுலா

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திர நாளையொட்டி, உற்சவ விநாயகர் ஆண்டிற்கு ஒருமுறை மரத்தினால் ஆன தங்கத் தேரில் வீதியுலா வருவது வழக்கம்.இந்தாண்டு கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, மர தங்கத் தேரில் சுவாமி வீதியுலா நேற்றிரவு நடந்தது. இதில், மலர்களால் அலங்கரித்த விநாயகர், மர தங்கத் தேரில் எழுந்தருளி, நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !