சங்கரலிங்கசுவாமி ஆசிரமத்தில் குரு பூஜை!
ADDED :4894 days ago
உளுந்தூர்பேட்டை: சங்கரலிங்க சுவாமிகள் ஆசிரமத்தில் 2018 திருவிளக்கு பூஜை நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீசங்கரலிங்க சுவாமிகள் ஆசிரமத்தில் உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி, தனி மனித முன்னேற்றம் வேண்டி 2,018 திருவிளக்கு பூஜை மற்றும் 15ம் ஆண்டு குரு பூஜை பெருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் நடந்த திருவிளக்கு பூஜையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு துணிகள் வழங்கினார். ஆசிரம தலைவர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.