உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

திருவாடானை கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

திருவாடானை : சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் கற்பகவிநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார், தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !