காவடிப்பிறை முருகன் கோயிலில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
ADDED :1510 days ago
பேய்க்குளம்: வெங்கடேஸ்வரபுரம் காவடிப்பிறை முருகன் கோயிலில் கார்த்திகைமுதல் வார சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்துாரிலிருந்து புனித நீர் எடுத்து அதிகாலை 4மணிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், காவடி பிறை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 108 வகையான அபிஷேகங்கள் நடந்தது. 11 மணிக்கு காவடி பிறை ஐயப்ப பக்தர்கள் சார்பில் பக்தி பஜனை நிகழ்ச்சி , 12மணிக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8மணிக்கு சாயரக்பூஜை, புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாஏற்பாடுகளை காவடிப்பிறை ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.