ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா: ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம்!
பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இன்று முதல் பகல் பத்து விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வைகுந்த ஏகாதசி பெருவிழா நேற்று(3ம் தேதி) துவங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் விழா நிகழ்ச்சிகள்:
தேதி கிழமை முக்கிய திருநாட்கள் விவரம்
03.12.2021 வெள்ளிக்கிழமை * திருநெடுந்தாண்டகம்
04.12.2021 சனிக்கிழமை * பகல்பத்து ( முதல் திருநாள்)
13.12.2021 திங்கட்கிழமை * மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்)
14.12.2021 செவ்வாய் கிழமை * இராப்பத்து (முதல் திருநாள்) வைகுந்த ஏகாதசி (அதிகாலை 4.45 மணி பரமபதவாசல் திறப்பு. அதிகாலை 4.45 மணி முதல் இரவு 10.00 மணி )
20.12.2021 திங்கட் கிழமை * திருக்கைத்தல சேவை மாலை 5.30 --- 6.00 மணி வரை
21.12.2021 செவ்வாய் கிழமை * திருமங்கைமன்னன் வேடுபறி மாலை 5.30 - 6.00 மணி வரை
23.12.2021 வியாழக்கிழமை * தீர்த்தவாரி - காலை 11.00 மணி
24.12.2021 வெள்ளிக்கிழமை * நம்மாழ்வார் மோட்சம் காலை 6.00 - * 7.00 மணிக்குள்
04.12.2021 சனிக்கிழமை முதல் 23.12.2021 வரை * மூலவர் முத்தங்கி சேவை