இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :1406 days ago
மதுரை: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் கார்த்திகை மூன்றாவது சோம வாரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் 1008 சங்காபிஷேகம் இன்று(டிச.,6ல்) ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.