மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1366 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1366 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1366 days ago
திருநெல்வேலி: செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 19ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு மேல் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 7ம் திருநாளான வரும் 17ம் தேதி காலை10.30 மணிக்கு மேல் அழகிய கூத்தர் சபையில் இருந்து விழாமண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். மாலை 4 மணிக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 8ம் திருநாளான 18ம் தேதி காலை10 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், மாலை5 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தீபபூஜை நடக்கிறது. 9ம் திருநாளான 19ம் தேதி காலை11 மணிக்கு மேல் அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 20ம் தேதி அதிகாலை2 மணிக்கு மகாஅபிஷேகம், காலை 5.30 மணிக்கு கோபூஜை, ஆருத்ராதரிசனம் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மதியம் 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா வருதல், மாலை5 மணிக்கு பஞ்சமுக அர்ச்சனை, இரவு 7.30 மணிக்கு பிற்கால அபிஷேகம், இரவு 10 மணிக்கு அழகிய கூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளைநெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், செயல் அலுவலர் ராஜேந்திரன், தக்கார் முருகன் கட்டளைதாரர்கள், பொதுமக்கள் செய்துள்ளனர்.
1366 days ago
1366 days ago
1366 days ago