முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1400 days ago
பெரியபட்டினம்: முத்துப்பேட்டை யாதவர் குடியிருப்பில் உள்ள மங்கள விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணி அளவில் முத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோயில் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை யாதவர் குடியிருப்பு கிராம மக்கள், கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.