திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் 20ல் ஆருத்ரா தரிசனம்
ADDED :1508 days ago
திருவாலங்காடு, : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் இந்த மாதம், 20ம் தேதி நடைபெற உள்ளது.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை. இது ரத்தினசபை என்று என்றழைக்கப்படுகிறது.மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடக்கும் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, 10 நாட்கள் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்.முதல் நாளான நேற்று, மூலவருக்கு மாணிக்கவாசகர் முற்றோதலுடன், காலை 7;30 மணிக்கு அபிஷேகம் நடந்தது. இந்த மாதம் 20ம் தேதி ஆருத்ரா நிறைவு விழாவின் 10ம்நாள் அபிஷேகம் நடைபெறும் என, கோவில் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.