விபுதேந்திர தீர்த்தர் மூல பிருந்தாவனத்தில் ஆராதனை உற்சவம்
ADDED :1442 days ago
திருநெல்வேலி: நெல்லை சி.என்.கிராமத்தில் விபுதேந்திர தீர்த்தர் மூல பிருந்தாவனத்தில் ஆராதனை உற்சவம் நடந்தது. நெல்லை சி.என்.கிராமம் தாமிரபரணி நதிக்கரையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு முன்பாக மத்வாச்சார்ய மூலமகா சமஸ்தானத்தை அலங்கரித்து த்வைத மதத்தை ஸ்தாபித்தவருமான நெல்லை மகான் விபுதேந்திர தீர்த்தரின் ஆராதனை விழா நேற்று நடந்தது. முன்னதாக நதிக்கரையில் அமைந்துள்ள விபுதேந்திர தீர்த்தரின் அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள், நிகழ்ச்சி நடந்தது. சீனிவாச மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.