உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி வின்ச் ஸ்டேஷன் பகுதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை

பழநி வின்ச் ஸ்டேஷன் பகுதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை

பழநி: பழநி வின்ச் ஸ்டேஷன் உட்பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பழநியில் சீசன் களைகட்டி உள்ளதால் வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். வின்ச் மற்றும் ரோப் கார் ஸ்டேஷன்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் வின்ச் ஸ்டேஷன் உட்பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்திற்கு வரும் வாகனங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனவே கோயில் நிர்வாகம் அப் பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதித்தது. தற்போது கடந்த சில நாட்களாக அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படாமல் வெறிச்சோடி உள்ளது. இதனால் பக்தர்கள் அங்கு உள்ள செல்பி ஸ்பாட்டில் பக்தர்கள் எளிதாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மருத்துவமனை மற்றும் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்திற்கு வரும் வாகனங்கள் எளிதாக வந்து செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !