உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ராப்பத்து 3ம் நாள்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ராப்பத்து 3ம் நாள்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா, ராப்பத்து 3ம் நாளில் நம்பெருமாள், நேர் கீரிடம், பஞ்சாயுத மாலை, பவழ மாலை,  மகரி, சந்திர ஹாரம், தாயார் - பெருமாள் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், சிகப்பு கல் அபயஹஸ்தம் , திருஆபரணங்கள்  அணிந்து  ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து மற்றும் இயற்பா என 21 நாட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மறுநாள் 4ம் தேதி முதல், உற்சவ நாட்களில் தினமும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவத்தின் 3ம் நாளான நேற்று (டிச.,16) நம்பெருமாள் நேர் கீரிடம், பஞ்சாயுத மாலை, பவழ மாலை,  மகரி, சந்திர ஹாரம், தாயார் - பெருமாள் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், சிகப்பு கல் அபயஹஸ்தம் , திருஆபரணங்கள்  அணிந்து  ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். 24ம் தேதி வரை ராப்பத்து நிகழ்ச்சி நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !