உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க கிரீடத்துடன் மடப்புரம் காளியம்மன் அருள்பாலிப்பு

தங்க கிரீடத்துடன் மடப்புரம் காளியம்மன் அருள்பாலிப்பு

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் மார்கழி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு தங்க கிரீடத்துடன் காட்சியளித்தார். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும், நேற்று மார்கழி மாத முதல் வெள்ளி என்பதால் சிறப்பு அலங்காரத்துடன் அம்மனுக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டு உச்சி கால பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !