நல்லாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4883 days ago
திருக்கனூர்: செட்டிப்பட்டு சித்தி விநாயகர், நல்லாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருக்கனூர் அடுத்த செட்டிப்பட்டு சித்தி விநாயகர் கோவில், நல்லாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு சித்தி விநாயகருக்கும், 10.15 மணிக்கு நல்லாத்தம்மன் விமானம், மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 3 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.