உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் அய்யப்பசுவாமி கோயில் மண்டலாபிஷேக லட்சார்ச்சனை

திருப்புத்தூர் அய்யப்பசுவாமி கோயில் மண்டலாபிஷேக லட்சார்ச்சனை

திருப்புத்துார்: திருப்புத்துார் தர்மசாஸ்தா அய்யப்பசுவாமி கோயிலில் மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு தினசரி லட்ச்சார்ச்சனை நடைபெறுகிறது. இக்கோயிலில் மண்டலாபிஷேக விழா டிச. 16ல் கணபதி,சாஸ்தா ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 10:30 மணிக்கு லட்சார்ச்சனையை ஐயப்ப சேவா சங்கத் தலைவர் ராமேஸ்வரன் துவக்கி வைத்தார். தினசரி காலை 8:00 மணிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. டிச.27 காலையில் மண்டலாபிேஷக ஆராதனைகள் மற்றும் மகா அபிேஷக தீபாராதனைகள் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஜன.8 ல் லட்சார்ச்சனை பூர்த்தியடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !