கிறிஸ்துமஸ் தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை
ADDED :1419 days ago
சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் தினத்தை உலகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம், சாந்தோம் பேராலயம், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம், நாகர்கோவில் கோட்டார் பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவலாயங்கள் மின்விளக்கு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.