போடி ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :1735 days ago
போடி: போடி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம் முன்னிட்டு விளக்கு பூஜை நேற்று நடந்தது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்த சபை குருநாதர் மகாலிங்கம், தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது. செயலாளர் சங்கிலிக்காளை, பொருளாளர் பாலு, துணைத் தலைவர்கள் விவேகானந்தன், கணேசன், துணைச் செயலாளர்கள் மாரிமுத்து, ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி அலங்காரத்தை அர்ச்சகர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.