கோயில்களில் சிறப்பு பூஜை ஏராளமானோர் சுவாமி தரிசனம்
தேவகோட்டை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு , திருப்பள்ளியெழுச்சி பூஜையை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் , மந்திரமூர்த்தி விநாயகர் கோயில் , புவனேஸ்வரி அம்மன் கோயில் , ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் , காமாட்சி அம்மன் கோயில் , அபிராமி அம்மன் கோயில் , சவுபாக்கிய துர்க்கை அம்மன் கோயில் , அய்யப்பன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. கோதண்டராமர் கோயில், ரங்கநாதர் பெருமாள் கோயில் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தன. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தன. மாலையில் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது.
சீரடி சாய்பாபா கோயிலிலும் சிறப்பு பூஜை கள் நடந்தன. திருமணவயல் உடையார் குடியிருப்பில் உள்ெொள தியான பீடத்துடன் கூடிய மகா கணபதி கோயிலில் சிறப்பு அபிஷேகம் பூஜைகளை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முககவசம் அணிந்து வர பக்தர்களை கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து அனைவரும் முககவசம் அணிந்தே வந்தனர்.