ஆண்டிபட்டியில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED :1378 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், அலங்காரம் செய்து வழிபட்டனர். ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர், சக்கம்பட்டி மெயின் ரோடு ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் அன்னதானம் செய்து வழிபட்டனர்.