உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தபுரம் கோயிலில் குருபூர்ணிமா விழா

கந்தபுரம் கோயிலில் குருபூர்ணிமா விழா

உடன்குடி:உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது.கந்தபுரம் சத்குரு சாய்ராம் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கோயில் குருபூர்ணிமா விழாவையொட்டி காலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பகலில் சிறப்பு குருபூர்ணிமா அபிஷேகமும், நண்பகலில் சிறப்பு ஆரத்தியுடன் உலக மக்களின் நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. உடன்குடி சைவப் பிரகாச வித்தியாசாலை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாம்ராட் டிரஸ்ட் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கினர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !