உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் அருகே சந்தனம் பூசுதல் மற்றும் கந்திரி விழா நடந்தது

நத்தம் அருகே சந்தனம் பூசுதல் மற்றும் கந்திரி விழா நடந்தது

நத்தம்: நத்தம் அருகே மாம்பட்டி சேகு பாவா சேகு பீவி பள்ளிவாசலில் உலக நன்மை வேண்டி சந்தனம் பூசுதல் மற்றும் கந்திரி விழா நடந்தது. கந்திரி விருந்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நத்தம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி மாம்பட்டியில் உள்ளது சேகு பாவா சேகு பீபி பள்ளிவாசல். இங்கு உலக நன்மை வேண்டி சந்தனம் பூசுதல் மற்றும் கந்திரி விழா நடந்தது. விழாவிற்கு நத்தம் சேக்தாவூது தலைமை தாங்கினார். இதற்காக வேண்டுதல் வைத்திருப்போர் குடும்பம் குடும்பமாக வந்து மடத்தில் தங்கியிருந்து, அதிகாலைத் தொழுகை நடத்தினர். மேலும் காலை மாடத்தில் விளக்கேற்றி கிடா மற்றும் சேவல்கள் வெட்டப்பட்டது. அதன் பிறகு நடந்த தொழுகையில் திரளானோர் கலந்துகொண்டு சந்தனம் பூசி வேண்டிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கந்திரி அசைவ விருந்து நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக நத்தம் சேர்மன் கண்ணன் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !