மதுரை மீனாட்சி கோயிலில் தெப்ப உற்ஸவம் துவக்கம்
ADDED :1446 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப உற்ஸவம் நேற்று (ஜன.,7) கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜன., 18 வரை இத்திருவிழா நடக்கிறது. ஜன.,12ல் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை, ஜன.,14ல் வலைவீசி அருளிய லீலை, கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை நடக்கிறது. ஜன.,15 எடுப்புத்தேர், ஜன.,16 தெப்பம் முட்டுதள்ளுதல், ஜன.,17 சிந்தாமணி கதிரறுப்பு மண்டபத்தில் கதிர் அறுத்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.ஜன.,18 காலை 10:40 மணி முதல் 11:04 மணிக்குள் தெப்ப உற்ஸவம் நடக்கிறது.அன்று காலை இரு சுற்றுகளும், இரவு ஒரு சுற்றும் தெப்பக்குளத்தை அம்மனும், சுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களின்றி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.